பரமக்குடி: பரமக்குடி அங்காள பரமேஸ்வரி, வாணி கருப்பணசாமி கோயில் மாசி சிவராத்திரி பால்குட விழா நடந்தது.
பரமக்குடி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்., 22 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 1 காலை 9:00 மணிக்கு மகா சிவராத்திரி அபிஷேக, ஆராதனைகள் அம்மனுக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.
அன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மறுநாள் அம்மன் மற்றும் வாணி கருப்பண சுவாமிக்கு அலங்காரம், வழிபாடுகள் நடந்தது. மேலும் பாரிவேட்டை நிகழ்ச்சியும், சுவாமிகளுக்கு சந்தன அலங்காரம் மற்றும் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடந்தது. மார்ச் 4 பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், வடைமாலை சாற்றும் விழா நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ஜீவானந்தம் செய்திருந்தார்.