பதிவு செய்த நாள்
16
ஜூலை
2012
10:07
ஆலங்குடி: ஆலங்குடியிலிருந்து அறந்தாங்கி செல்லும் மெயின்ரோட்டில் உள்ள அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஏகதின லட்சார்ச்சனை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலையில் உள்ள வான்புகழ் பஞ்சமுக ஆஞ்சநேயர், செல்வகணபதி, விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியவற்றுக்கு ஏகதின லட்சார்ச்சனை விழாவையொட்டி, நேற்று காலை ஆறு மணிக்கு கணபதி ஹோமம், காலை ஏழு மணிக்கு பூர்ணா ஹீதி, எட்டு மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு லட்ச்சார்ச்னை விழா சிறப்பாக நடந்தது. மதியம் 12 மணிக்கு தொடர் அன்னதானம், இரவு ஏழு மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் லட்ச்சார்ச்னை பூர்த்தி, மஹா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.இதில் புதுகை, அறந்தாங்கி, காரைக்குடி, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேயர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.