பதிவு செய்த நாள்
05
மார்
2022
03:03
ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில், கர்நாடக பக்தர்கள் வசதிக்காக, 85 கோடி ரூபாயில் தங்கும் விடுதி அமைக்கப்படும். முதல் கட்ட பணிகளுக்கு, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் பண்டராபுராவில் உள்ள அரசு தங்கும் விடுதி மேம்படுத்தப்படும்= கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியம் சார்பில், புண்ணிய தலங்களுக்கு குறைவான கட்டணத்தில், ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்
காசி யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு, தலா 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்= கோவில்களை அரசு நிர்வாகத்திலிருந்து விடுவித்து, சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்= ஹிந்து அறநிலைய துறை கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த 48 ஆயிரம் ரூபாய் தஸ்திக் தொகை, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது= கோவில்களின் பல்வேறு சேவைகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய, ஒருங்கிணைந்த கோவில் நிர்வகிப்பு தொழில்நுட்ப முறை அமல்படுத்தப்படும்.