சில்லமரத்துப்பட்டி மகாராஜா சுவாமி கோயிலில் முகூர்த்த கால் நடப்பட்டு, காப்பு கட்டுடன் விழா துவங்கியது கணபதி ஹோமம், திருவாசகம் படித்தல் உள்ளிட்டவை நடந்தது, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின் சீலக்காரி அம்மன், புவனேஸ்வரி அம்மன், கன்னிமூல கணபதி, மகா ராஜா மாயாண்டி சுடலை ஈஸ்வரர் சுவாமி, முத்தையா சுவாமிக்கு கொடை பூஜை நடந்தது. இதில் சாதம், கீரை. காய்கறி, முருங்கைக்காய், மீன், சக்கரைப் பொங்கல், கிழங்கு வகைகள் என எட்டு வகையான உணவுப் பொருட் கள் வைத்து படையல் வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பிரசாத பந்தியும் வைத்து பூஜை நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, இன்னிசை நிகழ்ச்சிகள், அன்னதானம் வழங்கப் பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.