ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2026 05:09
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இத் திருவிழாவை முன்னிட்டு செப். 15 ல் 60 கிராமங்களை சேர்ந்த அம்மனாக பாவிக்கும் ஏழு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு வெள்ளலூர் கோயில் குடியிருப்பு வீட்டில் 15 நாட்கள் தங்கி இருந்தனர். இன்று கோயில் குடியிருப்பு வீட்டில் இருந்து எட்டு கி.மீ.,தூரத்தில் கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு அம்பலகாரர்கள் தலைமையில் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் பதுமைகள் மற்றும் பூக்கொடைகளை சுமந்து சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் 60 கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ். பி., சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து நாளை செப். 30 தேரோட்டம், அக் .1 மஞ்சள் நீராட்டு, மற்றும் அக்.6 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.