Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் தங்கும் ஆதரவற்றோரை மீட்க ... ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அருளாசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

29 செப்
2026
04:09

திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.


திருப்பரங்குன்றம், தோப்பூர் சக் ஷம் தீமகி சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்களின் வளர்ச்சியில் அதிகமான கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த சக் ஷம் பள்ளிக்கூடமானது மாற்றுத்திறனாளிகள் தங்களது சொந்த காலில் நிற்பதற்கான பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. நமது நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆரோக்கியம், மருத்துவம், ஆலோசனைகளுடன் கூடிய சொந்த சக்தியை வளர்த்துக் கொண்டு வளர்வதற்கு உதவக்கூடிய இதுபோன்ற சேவை அமைப்புகள் தேவை. 


இது போன்ற அமைப்புகளை மேலும் பலப்படுத்துவதின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். ஒருபுறம் முதியோர் இல்லங்களையும் மற்றொருபுறம் இது போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவைப்படும் உடல் வளமும், மனவளம், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் பரிவுடன் கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு பொருளாதார நிலைமை, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் தாமதம், சரியான ஆலோசனைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு உதவி செய்யும் வகையில் இது போன்ற நிறுவனங்கள் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை. நமது நாட்டில் பல தர்மங்கள் நடைபெற்று வருகின்றன. அறம் செய்ய விரும்பு என்பதற்கு ஏற்ப இது போன்ற மிகவும் தேவையுள்ள துறைகளுக்கு பொதுமக்களும், அரசும் நல்ல உதவிகளை செய்து, இங்கு பணியாற்றுபவர்களுக்கு பணிபுரிவதற்குரிய பயிற்சிகளை அளித்து, கல்லூரி, பல்கலையில் இதுபோன்ற சேவை செய்வதற்கான விஞ்ஞான பூர்வமான கல்வித் திட்டத்தை மனித நேயத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை மாநில மத்திய அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். சேவை என்பது தேவை எங்கு அதிகமாக தேவைப்படுகிறதோ அங்கு அதிகமாக செய்யப்பட வேண்டும். வசதியாக இருப்பவர்களுக்கு உதவி செய்யும்போது என்பது ஒன்று.


உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக அமையும். மதுரையைச் சுற்றியுள்ள பகுதி பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இந்த பள்ளக்கூடம் மக்களுடைய ஆதரவுடன், மத்திய, மாநில அரசுகள், செல்வந்தர்களின் ஆதரவுடன், இங்கு பணியாற்றுபவர்களின் பொறுமையும், திறமையும், பொறுப்பும் கூடிய சிறப்பான, பொறுப்பான செயல்பாடுகளுடன் இயங்கும் இப் பள்ளி, மாற்றுத்திறனாளிகளும் அவர்களது பெற்றோர்களும் கவலைகளை குறைக்கக்கூடிய இடமாக, கவலைகளை நீக்கக்கூடிய இடமாக திகழ மீனாட்சி அம்மனின் அருள் கிடைக்கட்டும். மாற்றுத்திறனாளிகள் பெற்றோர்களின் கவலைகள் தீர்ந்து, நமது நாடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய நேசம் படைத்த தேசமாக மேலும் மேலும் வளர்வதற்கு, பாடத்திட்டங்களை அமைத்து நல்ல பணி, நாட்டிற்கான பணி, பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பணி தொடர வேண்டும். பொருளாதாரம், விஞ்ஞானம், மனிதநேயம் அடிப்படையில் இதுபோன்ற பள்ளிகளுக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க சுந்தரேஸ்வரரை பிரார்த்திக்கிறோம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar