திருநெல்வேலி: குன்னத்தூர் சங்கர மகாலிங்க ஈஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் துர்கா வழிபாட்டு குழு நிறுவனர் கோபிசாமி, குன்னத்தூர் சுந்தம்பிள்ளை ஆகியோரின் ஆத்ம சாந்தியடைய சிவனடியார்கள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. மதியம் நடந்த மகேஷ்வர பூஜையை மணக்கரை பாலகிருஷ்ணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் நெல்லை பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாரியப்பன், கணேசன், ராஜீவ்காந்தி, சண்முகம், சண்முகசுந்தரம், உலகம்மாள் செய்திருந்தனர்.