பதிவு செய்த நாள்
07
மார்
2022
04:03
பெரம்பலுார்: அரியலூர் மாவட்டம், சிறுகளத்துார் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, பெரியாண்டவர், பெரியநாயகி சாமிகளுக்கு பன்னீர், சந்தனம், இளநீர், கபம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபமெடுத்து நீசானி உடல் கிழித்து, குடலை பிடிங்கி வல்லக்கோட்டை இடித்து வீதிஉலா புறப்பட்டது.. இதில்,,திரளான பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், ரத்தக்காட்டேரி போன்றுவேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று சிறுகளத்துார் அருகே உள்ள மயானத்தை அடைந்ததனர். அங்கு மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதில், பொன்பரப்பி, பெரியாக்குறிச்சி கொடுக்கூர், மருவத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.