மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வி.ஐ.பி., நகரில், ஐஸ்வர்ய கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இக்கோவிலில் மூலஸ்தானம், கோபுரம், முன் மண்டபம், கன்னிமூல கணபதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், தீபாராதனையுடன் துவங்கியது. மாலைமுதல் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்களை, ஊர்வலமாக எடுத்து வந்தனர். 8:00 மணிக்கு, கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வி.ஐ.பி., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.