என்.வைரவன்பட்டி சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2022 04:03
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர் மற்றும் வயிரவ மூர்த்தி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கேரயிலில் திருப்பணி நடந்து முழுமையாக புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 4 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 2 நாட்களில் 3 கால யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:30 மணி அளவில் 4ம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடந்து காலை 7:00 மணிக்கு யாக சாலையிலிருந்து சிவாச்சார்யர்களால் கடம் புறப்பாடானது. தொடர்ந்து பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்களால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தான மகா அபிஷேகம் நடந்தது. ஏற்பாட்டினை அரிபுரம் வகை யோகி குல பண்டாரத்தார்கள், நாகரத்தார், கிராமத்தினர் செய்தனர்.