பதிவு செய்த நாள்
09
மார்
2022
10:03
சித்தூர்: காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 24ம் தேதி வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று (8 ம் தேதி) ஏகாந்த சேவையுடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, 7. 3 .2022 அன்று இரவு 10 மணிக்கு பல்லக்கு சேவை வெகுவிமர்சையக நடைபெற்றது. பல்லக்கு சேவையின் (காரணம்) கங்கா தேவியை திருமணம் செய்திருப்பது பார்வதி தேவிக்கு தெரியவந்ததால் பரமசிவனிடம் கோபித்துக்கொண்டு செல்லும் ஆதி சக்தியை பரமசிவன் சமரசம் செய்யும் முயற்சியே இந்தப் பல்லக்கு சேவையின் சாராம்சம்.முன்னதாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஞான பிரசுனாம்பிகா தேவியை(உற்சவ மூர்த்தி) அலங்கரிக்க பட்ட பல்லக்கில் அமரச்செய்து எதிரில் ஒரு கண்ணாடியை அமர்த்தி அதன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார் .கோபத்தில் உள்ள அம்மனை நேரடியாக பக்தர்கள் தரிசனம் செய்ய கூடாது என்பதால் கண்ணாடி வழியாக தன்னுடைய பக்தர்களுக்கு தாயார் அருள்பாலிக்கிறார் . முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தங்க ஆபரணங்களும் பட்டு வஸ்திரங்களாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரண்டு பல்லக்குகளில் சுவாமி அம்மையார்களை அமர்த்தி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.மகா சிவராத்திரி விழாவின் நிறைவு ஊர்வலம் என்பதால் பஞ்சமூர்த்திகள் முன்னர் செல்கையில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 2 பல்லக்குகளில் பக்தர்களுக்கு தரிசன பாக்கியத்தை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தின் போது கோலாட்டங்கள், தீயினால் சாகசங்கள் , டிரம்ஸ் ,மேளதாளங்கள், கேரளா செண்டை மேளங்கள், மற்றும் பல்வேறு சாமி வேடமணிந்த பக்தர்கள்,குதிரை ரதம் ,மகிஷாசுரமர்தனி ரதம் ,மங்கல வாத்தியங்களுடன் பக்தர்களை பல்லக்கு சேவை கண் கவரும் வகையில் இருந்தது.இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பகதர்கள் "ஹர ஹர மஹாதேவா சம்போ சங்கரா" என்ற சிவநாம ஸ்மரனத்துடன் பல்லக்கு சேவை நான்கு மாடவீதிகளில் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ,கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ,அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.