கும்பகோணம் சிவாலயங்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 03:03
தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய 3 சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, அந்தந்த கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. அப்போது உற்சவ பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பம்சமாக வரும் 13ம் தேதி ஓலை சப்பரமும், 15ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 17ம்தேதி தேரோட்டமும், 18ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவன்று மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாத சுவாமி கோவில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறுகிறது. இதே போல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது. இதை போல, திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகின்றது. முக்கிய விழாவான திருத்தேரோட்டம் வரும் 17ம்தேதியும், 18ம் தேதி காலை காவிரிஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.