நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 08:03
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மேல் டியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 4ம் நாளான 12ம் தேதி காலை 11 மணிக்கு வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனை, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாள் 18ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோயில் அலுவலர்கள் செங்கோல் மற்றும் திருப்பாதத்தை சுமந்து சுவாமி, அம்பாளை சுற்றிவருகின்றனர். தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. கோயில் ஆத்மார்த்த பூஜையில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறிய சிவலிங்கம், உடையவர் லிங்கம். பங்குனி உத்திர திருவிழாவின் போதே கருவறையில் இருந்து வெளியே வந்து காட்சியளிப்பது வழக்கம். உற்சவர் மண்டபத்தில் உடையவர் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை, பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.