திருச்சி திருவானைக்காவில் மட்டுமல்ல, செங்கல்பட்டு அருகேயும் ஜம்புகேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். அக்கோயிலைக் கட்டிய கோட்செங்கணானே. புத்திர பாக்யம் வேண்டி இக்கோயிலையும் கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தால் திருச்சி கோயிலுக்கும் முற்பட்டது என்கிறார்கள். வாசுகி நாகமும் முழு நீறு பூசிய முனிவர்களும், கோட்செங்கணானும், கண்டாரதித்த சோழனும் வழிபட்டுப் பேறு பெற்றிருக்கிறார்கள். நாகதோஷம் நீக்கி, திருமணத்தடை அகற்றும் மிக சிறப்பான ஸ்தலம்.