நிலக்கோட்டை: நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் வந்தார். இன்று பத்ரகாளி அம்மன் மண்டகப்படி கொலு மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தீச்சட்டி, கரும்பு தொட்டில் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. நாளை ரிஷப வாகனத்தில் நகர்வலம், பால்குட அபிஷேகம், மாவிளக்கு பிரார்த்தனை நடைபெறுகிறது. மார்ச் 16, புதன்கிழமையன்று பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வருகிறார். வியாழனன்று அம்மன் மஞ்சள் நீராடி, முளைப்பாரி உடன் நகர்வலம் வந்து ஊஞ்சல் ஆட்டத்துடன் பாவாடை அபிஷேகம் நடைபெறுகிறது.