Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ... மாரியம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 மார்
2022
04:03

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்த நிலையில், விருத்தாம்பிகை அம்மன் விமானத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்கள் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு மாயமானது. போலீசார் விசாரணையில், விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த மனநலம் பாதித்த சந்தோஷ்குமார்,49, என்பவர் கலசங்களை திருடியது தெரிய வந்தது. கலசங்களை மீட்ட போலீசார் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கோவில் நிர்வாகத்திடம் கலசங்களை ஒப்படைத்தனர். அதன்பின் கலசங்களுக்கு பரிகார பூஜைகள் செய்து, கோவில் சிவாச்சாரியார்கள் இணைந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் செய்தனர். காலை 9:30 மணியளவில் புனிதநீர் கலசங்களை சுமந்து வந்து, கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, நீதிபதி மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar