குன்னூர்: குன்னூர் கேத்தி அருகே கம்மந்து கிராமத்தில் கன்னி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
கோவிட் பாதிப்பால் 2 ஆண்டுகள் நடக்காமல் இருந்த திருவிழா தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஒள்ளுன உரி எனும் படுக சமுதாய சீர்திருத்த நாடகம் நடந்தது. தொடர்ந்து 2வது நாள் விழாவில் கரக உற்சவம் மற்றும் அம்மன் திருவீதி உலா, அன்னதானம் ஆகியவை நடந்தது. விழாவில், கேத்தி, மேல் ஒடையரட்டி, கெரையாடா, சோர குண்டு, சாந்தூர் ஊர் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.