கம்பம் : க.புதுப்பட்டியில் கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது க.புதுப்பட்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சர்வ மதத்தினர் பங்கேற்ற கும்பாபிஷேத்திற்கான ஏற்பாடுகளை இந்த கிராமத்தின் அனைத்து சமூகத்தினரும் அங்கம் வகிக்கும் கும்பாபிஷேக கமிட்டிசெய்திருந்தது. அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். கோயிலில் அபிஷேகம் முடிந்த பின் மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு, முல்லையாற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் ஜானகி, ஆனந்திசிவாஜி, அனுராதாஅருண், சவீதாசிவக்குமார், சாரதாகுணாளன், ஜமுனாரவி, சாந்திகண்ணன், முத்துலட்சுமிமுருகன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.