சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி முதல் தேதியன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து, பெரிய மாரியம்மன், அலமேலு அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.