பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2022 09:03
வெள்ளகோவில்: வெள்ளகோவில் கடைவீதி பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பழனி முருகனுக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாக, ரேக்ளா வண்டிகள் மூலம் வரிசை கட்டி செல்கின்றனர்.
அம்மாபட்டி, நெய்க்காரப்பட்டி, திருச்சி, லாலாப்பேட்டை, உட்பட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பங்குனி உத்திரத்திற்கு கொடுமுடி காவிரி கரையில் இருந்து தீர்த்தம் எடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாகவும், ரேக்ளா வண்டி கட்டியும் பழனி முருகனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தரிசிக்க ஆர்வத்துடன் செல்கின்றனர். பக்தர்கள் நெய்க்காரபட்டியிலிருந்து 100 க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் வரிசை கட்டி சாட்டை குச்சியை சக்கரத்தில் படவிட்டு சிறப்பு சப்தத்துடன் காங்கேயம் காளைகள் சீறிப்பாய்ந்து செல்கிறது.