பதிவு செய்த நாள்
17
மார்
2022
09:03
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஏப்., 14ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.குரு பகவான், வரும் ஏப்., 14ம் தேதி காலை 4.16 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.இதனையொட்டி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஏப்., 13ம் தேதி இரவு 10.00 மணிக்கு கலச பிரதிஷ்டையுடன் குரு பெயர்ச்சி விழா துவங்குகிறது. 14ம் தேதி அதிகாலை 1.௦௦ மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.அதிகாலை 3.௦௦ மணியளவில் குரு பகவானுக்கு மகா அபிஷேகம், 4.16 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.குரு பகவானின் பிரதிஷ்டை கலசம் மற்றும் சிறப்பு தரிசனம் வேண்டும் பக்தர்கள், அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் கோவிலில் 300 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.