ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று (16ம் தேதி) மாலை ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பல்லக்கில் எழுந்தருளி கொட்டாரத்தில் மாலை நெல் அளவை கண்டருளினார். பின்னர் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பூந்தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.