சித்தூர் குபேர கணபதி கோயிலில் மண்டல சாந்தி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2022 10:03
சித்தூர் : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஸ்ரீ குபேர கணபதி கோயிலில் கடந்த 21.1. 2022 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குபேர கணபதி கோயிலில் நேற்று (16ம் தேதி) மண்டல சாந்தி கால அபிஷேகம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி கோயில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் ,அர்ச்சகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.