ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன் மருதகாளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு கூழ் காய்ச்சி அம்மனுக்கு படையல் செய்தனர். இரவில் அம்மன் கரகம் எடுத்து பெண்கள் முளைப்பாரியுடன் பகவதி, மருதகாளி அம்மன் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்கள் பொங்கலிட்டு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாள் சிறப்பு பூஜைகள், ஆராதனைகளுக்கு பிறகு அம்மன் திருவீதி உலா சென்று பூஞ்சோலை அடைந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.