மானாமதுரை: மானாமதுரை குலாலர் தெருவில் புதிய குதிரை வாகனத்திற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை குலாலர் தெருவில் உள்ள சாமியாடி வெள்ளைச்சாமி மற்றும் அவரது மகன் சுந்தரம் நினைவாக அவர்களது குடும்பத்தினர் புதிதாக குதிரை வாகனத்தை செய்து குலாலர் மண்டகப்படி கொடுத்துள்ளனர். இதனையடுத்து குதிரை வாகனத்திற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக குலாலர் சமூக மடத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு குதிரை வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.பின்னர் குதிரை வாகனத்தில் புனித நீர் அடங்கிய கடம் வைக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.வீதி உலாவின் போது ஏராளமான பெண்கள் புதிய குதிரை வாகனத்திற்கு ஆரத்தி எடுத்தும் அர்ச்சனை செய்தும் வரவேற்றனர்.இந்நிகழ்ச்சியில் குலாலர் தெருவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.