Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவை., புனித சந்தியாகப்பர் ஆலய ... சதுரகிரியில் சங்கு ஒலி எழுப்பி பூஜை: அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதி! சதுரகிரியில் சங்கு ஒலி எழுப்பி பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடி அமாவாசை: ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2012
10:07

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நெரிசலில் தவித்தனர்.இரண்டு கி.மீ.,தூரத்திற்கு முன்னதாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் முதியவர்கள் நடந்து செல்ல அவதியடைந்தனர். புனித நீராடிய பின் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் 48வது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். கோயில் மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை பக்தர்கள் பய பக்தியுடன் வாங்கி குடித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar