தேவகோட்டை: தேவகோட்டை மணிமுத்தாறு கரையோரம் உள்ள சிங்கமுக காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து பாபு குருக்கள் தலைமையில் வேதவிற்பன்னர் சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து சிங்கமுக காளிகாம்பாளுக்கு 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தன. இதனைத் தொடர்ந்து. வெள்ளி அங்கி சாற்றப்பட்டு நவசக்தி ஹோமமும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசித்தனர்.