சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு, தங்க தேர் அறப்பணி குழு சார்பில், திருநாவுக்கரசர் நந்தவன திருமடத்தின் முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில், ஏழு கோடி ரூபாய் செலவில், தங்க தேர் வடிவமைக்கும் பணி நடந்தது வருகிறது. மர வேலைகள், செப்பு தகடுகள் பொருத்தும் பணி முடிந்து, தங்க தகடுகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. முன்னதாக, தங்க கட்டிகளை முருகப்பெருமான் முன் வைக்கப்பட்டு, 108 தங்க காசுகளால் அர்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தங்க தகடுகள் பொருத்தும் பணி துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தங்கத்தேர் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி, தங்கத்தேர் அறப்பணி குழுவினரும், அறங்காவலர்களும் சுல்தான்பேட்டை போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.