டிச.,16 முதல் ஜன.,14 வரை : ராமேஸ்வரம் கோயிலில் நடை திறப்பில் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2025 05:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாதத்திற்கு டிச., 16 முதல் ஜன., 14 வரை கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மார்கழி 1ம் தேதியான டிச., 16ல் ஜன.,14 வரை ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறந்து 4 மணி முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்கம் பூஜை தரிசனம் நடக்கும். காலை 5 மணிக்கு மார்கழி மாத திருப்பள்ளி ஏழுச்சி பூஜை, தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடக்கும். காலை 6:00 மணிக்கு திருவனந்தல் பூஜை காலை 7:30 மணிக்கு விளாபூஜை, காலை 10 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 1 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். பின் மதியம் 3 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறந்து 3:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை, இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும் எனவும், உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு சமயத்தில் மேற்கண்ட பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது என கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்தார்.