தொண்டாமுத்தூர்: பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவிலில், இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன் பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கொங்கு திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, உற்சவர் திருமஞ்சனமும், காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் பஜனை நடக்கிறது.