வாழ்வு நிலையற்றது என்னும் ஞானத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகப்பெருமான் பழநியில் இருக்கிறார். உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் உயிர்கள் ஞானமார்க்கத்திற்கு திரும்ப வேண்டும் என்பதை உணர்த்த தண்டத்துடன் முருகப்பெருமான் இங்கிருக்கிறார். இவரது திருமேனி நவபாஷாணத்தால் ஆனது. வியர்க்கும் தன்மை கொண்ட இவரது சிலை உயிர்ப்புள்ளதாக வடிக்கப்பட்டுள்ளது. சுவாமியின் உக்கிரத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தத்தால் தினமும் அபிஷேகம் செய்கின்றனர். இவருக்கு பூசப்படும் சந்தனமும், கவுபீன தீர்த்தமும் மருத்துவ குணம் கொண்டவை.