ராஜாவாக காட்சியளித்தாலும், ஆண்டி முருகனின் ஆடை கோவணம் தான். மனிதா! என்ன தான் சம்பாதித்தாலும், கடைசியில் மிஞ்சுவது ஏதுமில்லை. கோவணம் உயிருள்ள வரை மானம் காக்கப் பயன்படும். பின்னர் அதுவும் கூட இல்லாமல் சாம்பலாகும் உனக்கு ஏன் இந்த ஆணவம், பணத்திமிர், தற்பெருமை, கர்வம் இன்னும் எத்தனையோ வேண்டாத தீயகுணங்கள். எல்லாம் மாயை. வாழும் காலத்தில் நாலு பேருக்கு நல்லது செய். ஆனால் பலனை எதிர்பார்க்காதே. எல்லாவற்றையும் என்னிடம் அர்ப்பணித்திடு. யாமிருக்க பயமேன் என்பதே ஆண்டிச்சாமியான தண்டபாணியின் மவுனம் சொல்லும் உண்மை.