திருத்தணி கோவில் உண்டியல் 45 நாளில் ரூ.2.10 கோடி வசூல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2025 01:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் 45 நாட்களில் பக்தர்கள், 2.10 கோடி ரூபாய் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்கின்றனர். இவர்கள் தங்களது காணிக்கைகள் ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள் போன்றவை, உண்டியலில் செலுத்துகின்றனர். கடந்த, 45 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை நேற்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் உண்டியல் தி றந்து எண்ணப்பட்டது.
இதில், 2 கோடியே,9 லட்சத்து, 51 ஆயிரத்தி, 249 ரூபாய் ரொக்கம், 794 கிராம் தங்கம், 15,128 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.