பதிவு செய்த நாள்
28
டிச
2025
01:12
சிவாஜி நகர்: ஆங்கில புத்தாண்டை ஒட்டி, உலக அமைதிக்காக, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும், 31 ம் தேதி 108 கலசத்துடன், 24 மணி நேரம் மஹா பூஜை துவங்குகிறது.
பெங்களூரு சிவாஜி நகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில், 29ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. உலக அமைதிக்காக, வரும், 31ம் தேதி இரவு 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், 108 கலச பூஜை துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ கணபதி, நவக்கிரஹ ஹோமம், துர்கா பரமேஸ்வரி ஹோமம் நடக்கிறது.
ஜன., 1ம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனைக்கு பின், 108 மஹா கலச அபிஷேகம்; 4:00 மணிக்கு மலர் அலங்காரம், 5:00 மணிக்கு மஹா மங்களாரத்தி, அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மஹா பூஜை நடக்கிறது.
கோவிலில் அன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை அங்காள பரமேஸ்வரி பக்தி ஸ்ரீ அய்யப்ப படி பூஜை நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி கீதம் குழுவினரின் அய்யப்ப பஜனை நடக்கிறது. இதில் பாடகர்கள் சுரேஷ் பாபு, சுஜாதா ராஜன் மற்றும் சிவா, தபேலா ராஜன், கீ போர்டு பாண்டியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் காலை 6:00 முதல் 9:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரையிலம் நாதஸ்வரி கச்சேரி நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை தலைமை புரவலர் ஆர்.அருணா பாலகிருஷ்ணன், புரவலர் வி.பி.மனோகர், தலைவர் எஸ்.எம்.வேலு, பொது செயலர் எஸ்.ரமேஷ், பொருளாளர் டி.சதீஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.