Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் உலக ... ஐயப்பன் மணிமண்டபத்தில் படி பூஜை: பக்தர்கள் பங்கேற்பு ஐயப்பன் மணிமண்டபத்தில் படி பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயாலிகாவல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்
எழுத்தின் அளவு:
வயாலிகாவல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்

பதிவு செய்த நாள்

28 டிச
2025
01:12

வயாலிகாவல்: பெங்களூரு வயாலிகாவலில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி தினமான, 30ம் தேதி அதிகாலை, 1:35 முதல் அன்று இரவு, 11:45 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


பெங்களூரு மல்லேஸ்வரம் வயாலிகாவலில் உள்ள டி.டி.டி., எனும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. திருப்பதி திருமலை தேவஸ்தான வாரிய உறுப்பினர் நரேஷ் குமார், பெங்களூரு டி.டி.டி., ஆலோசனை குழு தலைவர் வீரஆஞ்சநேயலு, பெங்களூரு கண்காணிப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.


அவர்கள் கூறியதாவது:


வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு தடையில்லா தரிசனம் வழங்குவதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 30ம் தேதி அதிகாலை, 1:35 மணி முதல் அன்று இரவு 11:45 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தடையின்றி அன்னதானம், குடிநீர் வழங்கப்படும். பஜனை, இசை கச்சேரிகளும் நடத்தப்படும்.


அதிகாலை, 2:00 மணிக்கு லட்டு விற்பனை துவங்கும். ஒரு லட்டு விலை, 50 ரூபாய். காலண்டர், டைரி விற்பனையும் நடைபெறும். இந்த ஆண்டு, 70,000 பக்தர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவு தரிசனத்திற்கு, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வழியில் சாமி தரிசனம் செய்யலாம். வாகனங்களை பார்க்கிங் செய்ய வியாலிகாவல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar