பங்குனி உத்திரத்தன்று திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி திருமணம் நடக்கும். இதற்காக அதிகாலையில் பள்ளியறையிலிருந்து முருகன் கருவறைக்கு சென்றதும் அபிஷேகம் நடக்கும். தீபாராதனை முடிந்ததும் பெரிய பூஞ்சப்பரத்தில் மேலக்கோயில் சென்று தவத்தில் ஆழ்ந்திருப்பார். மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளும் முருகன் மேலக்கோயில் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்திற்கு வருவார். அப்போது வள்ளி மணக்கோலத்தில் எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் நிகழும். தேனும், தினை மாவும் வழங்கியதை நினைவூட்டும் விதமாக வள்ளிக்கு தினை மாவிளக்கு ஏற்றுவர். வள்ளி கல்யாணத்தை தரிசித்து மாவிளக்கு ஏற்றினால் திருமணத்தடை நீங்கும்.