சோழவந்தான் : சோழவந்தான் அருகே இரும்பாடி பாலமுருகன் கோயில் 51ம் ஆண்டு பங்குனி உத்திர உற்சவ விழா நடந்தது. வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி மின்னொளி அலங்கார வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் ஜெயராமன், ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி.,கிராம நல சங்கத்தினர் செய்திருந்தனர்.