திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே அடைக்கலம் காத்த பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர் அழகு சவுந்தரி அம்பாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று மஞ்சுவிரட்டு நடக்கிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனித் உத்திரத் திருவிழா மார்ச் 10ல் மதியாத கண்ட விநாயகர், சவுந்தரி அம்பாளுக்கு காப்புக்கட்டி துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த உற்ஸவத்தில் தினசரி காலை திருவீதி புற்பாடும், இரவு வாகனங்களில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இன்று காலை யில் 2 தேர்களில் அம்பாள் மற்றும் விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் விநாயகரையும், அம்பாளையும், அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். மாலை 5:40 மணிக்கு தேர் வடம் பிடித்து முதலில் விநாயகர் தேரோட்டம் துவங்கியது. தொடர்ந்து அம்பாள் தேரும் வடம் பிடித்து புறப்பட்டது. திரளாக கிராமத்தினர் தேரோட்டத்தில் பங்கேற்றனர். இன்று தீர்த்தம் கொடுத்தல், மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. நாளை காப்புகளைதலும், ஊஞ்சல் திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது.