ராஜபாளையம்: ராஜபாளையம் அணைத்தலை விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. ராஜபாளையம் தென்றல் நகர் செண்பகத்தோப்பு ரோட்டில் அணைத்தலை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பிரதிஷ்டை விழா நிகழ்ச்சிக்காக 1ம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக அணைத்தலை விநாயகர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் பிரதிஷ்டை விழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தனவ சங்கரி ஆத்மானந்த சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.