திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா தீர்த்தவாரி பூஜையுடன் நிறைவு பெற்றது.திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. காலை, மாலை நேரங்களில் விசேஷ திருமஞ்சனம்சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் பல்வேறு வாகனங்களில் உற்ஸவ மூர்த்திகளின் உள் மற்றும் வெளி வீதியுலா புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.நேற்று காலை 8:00 மணி அளவில் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில்இருந்து உற்ஸவர்கள்ஆதிஜெகநாதர் கருட வாகனத்திலும், பட்டாபிஷேக ராமர் அனுமன் வாகனத்திலும் எழுந்தருளினர். திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை சேது ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு உள்ள கடற்கரையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.