சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப். 3ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2022 03:03
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப். 3 கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா, பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். இரு வருடங்களாக கொரோனா தொற்றினால் கோயில் வளாகத்திலேயே திருவிழா நடந்தது. தேரோட்டம் நடைபெறவில்லை. தற்சமயம் கொரோனா விதிமுறைகள் இல்லாததால் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக திருவிழாவிற்கு உத்தரவு கேட்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது. கிடைத்த உத்தரவின்படி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஏப். 3 ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஏப். 10 ல் பொங்கல் விழா, ஏப். 11 ல் கயர் குத்து விழா, ஏப். 13 ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 3 ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. மே 10 , பொங்கல் திருவிழா, மே 11 கயிறு குத்து விழா, மே 13 , தேரோட்டம் நடைபெற உள்ளது. இரு வருடங்களாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த வருடம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.