காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2022 07:03
கம்பம்: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி யில் கருமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது..ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவில் திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிந்தான திருவிழா நேற்று துவங்கியது. அதிகாலையில் வீட்டுக்குள் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.தொடர்புக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி விளையாட்டுகளில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கினர். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றி நின்று தாயே கருமாரி என்று கோஷமிட்டனர். உடம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அபிஷேக ஆராதனைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.தொடர்ந்து இன்றும் நாளையும் திருவிழா நடைபெறுகிறது. பொங்கலிடுதல், அக்னிசட்டி எடுத்தல் உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.. நீர் மோர் பந்தல், குளிர்பானங்கள் வழங்குதல் போன்றவற்றை விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.