பதிவு செய்த நாள்
24
மார்
2022
06:03
திருப்பூர் : அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. திருப்பூர் அருகே மங்கலம், அக்ரஹாரப்புத்துார் பத்ரகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, 15ம் தேதி, பொரிச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 21ம் தேதி காலை, விநாயகர் பொங்கல் நிகழ்ச்சியும், இரவு, அம்மை அழைப்பும் நடந்தது.நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று, காலை, பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சியும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.மாலையில், பூவோடு, முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. இன்று மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.