பதிவு செய்த நாள்
25
மார்
2022
03:03
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று சிறப்பாக நடந்தது.
கடந்த, 18ம் தேதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, கோவிலில் 12ம் ஆண்டு தேர் திருவிழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர், காப்பாய் கடை, பஜார் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பயபக்தியுடன் காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக, குதிரை வாகனம், சிம்ம வாகனம் மற்றும் புலி வாகனத்தில், அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது. வரும், 28ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மறுப்பூஜையுடன், விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.