கிளியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2022 03:03
உளுந்தூர்பேட்டை: கிளியூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவையொட்டி கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 8 நாட்கள் இரவு உற்சவம் நடந்தது.
9ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீதியுலா நடந்தது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு நல்லதண்ணீர் குளக்கரையில் இருந்து அக்னி கரகம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது. இரவு 7.30 மணியளவில் ஆடுகளுக்கு அலகு குத்தி 50 அடி உயரத்தில் செடல் உற்சவம் நடந்தது. இன்று(26ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.