Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனக நாராயண பெருமாள் பிரமோத்ஸவ விழா: ... உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

பதிவு செய்த நாள்

26 மார்
2022
08:03

அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகங்கள் நடந்தன. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவயாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ரயாகம் உள்ளிட்ட, பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளிகவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிேஷக அலங்காரம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்கல் ஆகியவை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தஷ்ண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar