பதிவு செய்த நாள்
26
மார்
2022
09:03
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆறு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
.
இதே போல், திண்டுக்கல் அபிராமி அம்மன், ரயிலடி சித்தி விநாயகர், வெள்ளை விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.தாண்டிக்குடிபாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. காலபைரவர் மந்திரங்கள் ஒதப்பட்டன. பக்தர்கள் தேங்காய், மிளகு,நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் வடைமாலையுடன் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.