கமுதி: கமுதி முத்துமாரி அம்மன் கோயிலில் 2008 விளக்கு பூஜை நடந்தது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.தினந்தோறும் அம்மன் திருவீதி உலா நடந்தது.கடந்த மார்ச் 23ந் தேதி பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்துகடன் செலுத்தினர். இந்நிலையில் காலை 7 மணிக்கு மூலவரான அம்மனுக்கு மஞ்சள்,சந்தனம், பால், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு 2008 விளக்குபூஜை நடந்தது.விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.