Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னோர்கள் மீது விரோதம் ... பதவிக்கு வயது தடையல்ல!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு தாயின் காதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


கண்ணன் காதலுக்கு குருநாதர் பாரதியார். காளி காதலுக்கு குருநாதர் பரமஹம்சர். அதுபோல என் சிவக் காதலுக்கு குருநாதர் ரமணர். அவரது தீராக் காதலில் பிரவகித்த கங்கை தான் அக்ஷர மணமாலை. ஞாயிறு தோறும் அதைப் பாட கோயிலுக்குச் செல்வேன்.
அப்போது மனதிற்குள், ‘‘மகனே... இங்கிருக்கும் விநாயகர் பக்தையிடம் பேசிப் பார். நிறைய இருக்கிறது கற்றுக்கொள்ள...’’ என்றார் சிவபெருமான்.  
அந்த பெண்ணின் பெயர் பூமதி. ‘எனக்கு இந்த விநாயகர் தான் எல்லாம்’  என்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர். ‘‘என் மகன் மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதினான். ஆனால் தேர்வு ரத்தாகி விட்டது. அதுவும் நன்மைக்கே. விநாயகர் நல்வழி காட்டுவார்’’ என்றாள்.
 ‘‘அம்மா.. உங்கள் பையனின் கல்வித் தகுதியை கொடுங்கள். என் மூலம் தீர்வு கிடைக்கலாம்’’ என்று என் முகவரி அட்டையை கொடுத்தேன். அதை வாங்கி தன் காதல் தெய்வத்தின்(விநாயகர்) கையில் கொடுத்தாள். முதல் முறையாக என் முகவரி அட்டை கடவுளின் கையில்... கண்டு பிரமித்தேன்.
பூமதி தொடர்ந்தாள். ‘‘கடந்த ஒன்றரை வருடமாக எங்கு சென்றாலும் இரவோடு இரவாக கோயிலுக்கு வந்து விடுவேன். எனக்கு விநாயகர் தான் எல்லாம். எனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போறான்?’’ என்றாள்.
மேலும்‘‘ இந்த கோயில் அர்ச்சகர் விநாயகருக்கு வெள்ளி கவசம் பண்ணப் போறதாக சமீபத்தில் என்னிடம் சொன்னார்’’ என்றாள்
‘‘அம்மா... வெள்ளி கவசம் பண்ண ரொம்ப செலவாகுமே’’ என நான் கேட்டேன்.
‘‘7 லட்சம் வரைக்கும் ஆகும். என் மகனுக்கு வேலை கிடைத்ததும் பி.எப்., பணத்தில் லோன் போடலாமான்னு நினைச்சிருக்கேன்’’  என்றாள்.
 என் கையில் 7 லட்சம் இருந்தாலும் கொடுக்கத் துணிய மாட்டேன். அப்படியே விரும்பினாலும் என்னிடம் இருப்பதை தருவேனே தவிர கடன் வாங்க மாட்டேன். பக்தியின் ஆழமின்மை கண்டு எனக்கு நானே வெட்கப்பட்டேன்.      
அந்த தாயிடம் பேச வைத்த சிவபெருமானுக்கு மானசீகமாக அபிஷேகம் செய்தபடி வீட்டை நோக்கி நடந்தேன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar