தொட்டியில் மணல் நிரப்பி, அதன் மீது பசும்பாலில் ஊற வைத்த நவதானிய விதைகளை துாவ வேண்டும். துாவும் போது அம்பிகை குறித்த பக்தி பாடல்களைப் பாட வேண்டும். முளைப்பாரி தொட்டியில் துாவப்பட்ட விதைகள் பச்சை பசேலென வளர்ந்தால் வாழ்வு செழிக்கும். முளைப்பாரி நீளமாக வளர்ந்திருந்தால் அம்மனருளால் சுபவிஷயங்கள் நடந்தேறும். கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் முளைப்பாரி வைப்பது வழக்கம். இதை ‘அங்குரார்ப்பணம்’ என்று சொல்வர்.